×

லாக்டவுன் நேரத்துல இப்புடி பண்ணலாமா...?  நடுராத்திரியில் அருண் விஜய் செய்த வேலை!

நடிகர் அருண் விஜய் தான் அறிமுகமான பிரியம் பட காலத்தில் இருந்தே பிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் தனது பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

 

அடிக்கடி இவரது சமூகவலைத்தள பக்கம் சென்றால் இவர் கஷ்டப்பட்டு செய்யும் ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்ந்திருப்பார்.  இது சினிமா வாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்ளும் முயற்சியா என்பதை ரசிகர்கள்தான் அறிவர். அந்தவகையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் அருண் விஜய் அவ்வப்போது வீட்டில் இருந்தபடியே செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 40 கிலோமீட்டர் சைக்கிள் ரைட் செய்துள்ளதை புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். சாலையில் செல்லாமல் வீட்டின் அருகே இந்த ஒர்க்அவுட்டை செய்துள்ளதாக கூறியுள்ளார். இருந்தாலும் லாக்டவுன் நேரத்தில் நீங்கள் இப்படி செய்வது உங்களது உடல் நலத்திற்கு பாதுகாப்பற்றது என அவரது ரசிகர்கள் செல்லமாக அறிவுரை வழங்கி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News