×

எனக்கு கொரோனாவா...? அதிர்ந்துபோன அமீர்கான்!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், என்னுடைய அலுவலக ஊழியர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான்.  அந்த ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் நலமாக இருக்கின்றனர்.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை சுகாதாரத்துறையினர் உடனடியாக  தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும்  தீவிர சிகிச்சையால் தனது ஊழியர்கள் விரைவில் மீண்டு வருவார்கள்.

அதிலும் குறிப்பாக என்னுடைய தாயாருக்கு மட்டும் இன்னும் பரிசோதனை முடிவு வரவில்லை. அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வர வேண்டும் என்று தான் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன். எனவே தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அமீர்கான் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News