×

மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பவே முடியாதா? ரெய்னாவை வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து நீக்கிய நிர்வாகம்!

சி எஸ் கே அணியின் துணைக் கேப்டன் ரெய்னா அணி நிர்வாகத்தோடு பிணக்கு ஏற்பட்டு இந்தியா திரும்பியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

சி எஸ் கே அணியின் துணைக் கேப்டன் ரெய்னா அணி நிர்வாகத்தோடு பிணக்கு ஏற்பட்டு இந்தியா திரும்பியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணி துபாயில் ஐபிஎல் போட்டிகளை விளையாடுவதற்காக சென்றபோது அங்கு அணி நிர்வாகத்துக்கும் துணைக் கேப்டன் ரெய்னாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இந்தியா திரும்பினார். தோனிக்கு கொடுத்தது போன்ற  ஒரு அறையை ரெய்னா கேட்டதாகவும், நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்காததால் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

இது சமம்ந்தமாக சிஎஸ்கே அணி உரிமையாளர் என் சீனிவாசன் கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மனக்கசப்பை மறந்து ரெய்னா இப்போது அணிக்குள் திரும்ப பயிற்சியாளர் பிளமிங் மூலமாக முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அணி நிர்வாகம் இப்போது அதிரடியாக சி எஸ் கே அணியின் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து ரெய்னாவை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரெய்னா மீண்டும் அணிக்குள் திரும்புவது கடினம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News