×

அவரப்போல நல்லவரைப் பார்க்க முடியாது… இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக பாலிவுட் நடிகைகள்!

இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாக நடிகை பயல் கோஷ் என்பவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 

இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாக நடிகை பயல் கோஷ் என்பவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனராகவும் பல உலகத்தரமான படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். இதன் மூலம் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சமீபகாலமாக ஆளும் மத்திய அரசையும் மோடியையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அவர் மேல் பயல் கோஷ் என்ற நடிகை தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டை வைத்தார். இது நம்ப முடியாததாகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாகவும் அமைந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முழுவதுமாக அனுராக் காஷ்யப் மறுத்துள்ளார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப்புக்காக அவரது முன்னாள் மனைவியும், அவரின் எல்லா படங்களின் எடிட்டருமான ஆர்த்தி பஜாஜ், நடிகை தாப்ஸி பண்ணு மற்றும் நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் எல்லாரும் தாங்கள் ஒருபோதும் அவருடன் இருக்கும் போது பாதுகாப்பின்மையை உணர்ந்ததில்லை என சொல்லியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News