×

சூர்யா ஆசம்.. அபர்ணா அபாரம்.... சூரரைப்போற்று நிஜ ஹீரோ கேப்டன் கோபிநாத் டிவிட்...

 

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் இன்று அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது இப்படம்  பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

மிகவும் குறைந்த விலையில் ஏழைகள் பயணம் செய்யும் வகையில் விமான சேவையை துவங்கிய கேப்டன் கோபிநாத் என்பவர்தான் இப்படத்தின் நிஜ ஹீரோ. அவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில்தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

twit

இந்நிலையில், இப்படத்தை பார்த்த கேப்டன் கோபிநாத் தனது டிவிட்டர் பக்கத்தில் சூரரைப்போற்று படத்தை பாராட்டி டிவிட் செய்துள்ளார். 

சூர்யா மற்றும் அபர்ணாவின் நடிப்பு, அந்த கதாபாத்திரத்தை இயக்குனர் சுதா கொங்கரா வடிவமைத்த விதம், சுதா கொங்கராவின் இயக்கம், இசை என அனைத்தும் சிறப்பாக இருந்ந்தது. சில காட்சிகள் கற்பனை என்றாலும், என் புத்தகத்தின் சாராம்சத்தை இப்படம் காட்டியிருந்தது என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News