கேப்டன் மில்லர் வசூலை முறியடித்ததா DC?
Aug 14, 2026, 17:12 IST
'ராக்கி' தான் அருண் மாதேஸ்வரன் இயக்குநராக அறிமுகமான முதல் படம். இதையடுத்து 'சாணிக் காயிதம், கேப்டன் மில்லர், டிசி' ஆகிய படங்களை இயக்கினார்.
இதில் 'ராக்கி' படம் முடிந்து தாமதமாக தான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 'சாணிக் காயிதம்' டைரக்டாக OTT-யில் வெளிவந்தது.
'கேப்டன் மில்லர்' 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆனது. கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்த இந்த படம் வெளியாகி முதல் 7 நாட்களில் ரூ.64.57 கோடி வசூலித்திருந்தது.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியான 'டிசி' இதே 7 நாட்களில் ரூ.65 கோடி வசூல் செய்து கெத்து காட்டியுள்ளது. இதில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.