அவன் பொருளையே எடுத்து அவனையே அடிக்கிறது இதுதான்! சாதனை படைத்த ‘கேப்டன் மில்லர்’

லண்டனில் தற்போது 10வது தேசிய விருது விழா நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டில் இருந்து கேப்டன் மில்லர் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற அடிப்படையில் தேசிய விருதை பெற்றிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கேப்டன் மில்லர்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருப்பார். இவர்களுடன் இணைந்து சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். வரலாற்று பின்னணியில் ஆங்கிலேயர் கால கட்டத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.

அருண் மாதேஸ்வரன் படம் என்றாலே ரத்தமும் வெட்டுமுமாக தான் இருக்கும். அப்படி தான் இந்த படமும் அமைந்திருந்தது. இப்போது இந்த படத்திற்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற விருது கிடைத்தவுடன் இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது instagram பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் அவர்களது இணையதள பக்கத்தில் அவர்களது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கின்றனர். இதை பார்த்த பல ரசிகர்கள் அவர்களது கமெண்ட்களை கூறி வருகின்றனர் .

அதில் ஒரு ரசிகர் இதற்கு பெயர் தான் அவன் பொருளை எடுத்து அவனை அடிக்கிறது என கூறி கமெண்ட்டை அடித்திருக்கிறார். அதாவது ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒரு போராட்டம் மிகுந்த கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் லண்டனில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்று அளவில் சாதனை படைத்திருப்பதால் அவர்கள் இந்த விருதை கொடுத்து இருப்பது ஒரு மிகப்பெரிய பெருமை என கூறி வருகிறார்கள்.

Admin
Admin  

Related Articles

Next Story