Categories: Cinema News latest news

அஜித்தை அசிங்கப்படுத்திய கேப்டன் மில்லர் நடிகர்!.. இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா!…

Actor Ajith: கோலிவுட்டே அதிசயித்துப் பார்க்கக் கூடிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அதுமட்டுமில்லாமல் மற்ற மொழி நடிகர்களுக்கும் விருப்பமான நடிகராகவும் இருந்து வருகிறார்.  தன் வாழ்க்கையை தான் நினைத்ததை போல் வாழ வேண்டும் என்று விரும்புபவர் அஜித். அதனாலேயே அடிக்கடி வெளி நாடு பயணமாக அவ்வப்போது வெளி நாடு சென்று விடுகிறார்.

சமீபத்தில்தான் தன் மகளின் பிறந்த நாளை தன் குடும்பத்துடன் துபாயில் கொண்டாடிய அஜித் குடும்பத்தை சென்னைக்கு அனுப்பி விட்டு அவர் மட்டும் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு சென்றுவிட்டார். கோலிவுட்டில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக பெரும் புகழுடன் இருப்பவர் அஜித்.

இதையும் படிங்க: பாதி டிரெஸ்ல காட்டினா பல்ஸ் எகிறுது!.. ஃபோகஸ் பண்ணி ரசிக்கும் காஜி ஃபேன்ஸ்…

ஆனால் அவரை யாரென்றே தெரியாத அளவுக்கு கேப்டன் மில்லர் பட நடிகர் கூறியது பெரும் ஆச்சரியமாக இருந்தது. கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வில்லனாக நடித்த எட்வர்ட். இவர் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறா. தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

அவரிடம் பல நடிகர்களின் புகைப்படங்களை காட்டி அவரை பற்றி கூறுங்கள் என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதலில் விஜய் புகைப்படத்தை காட்டியதும் இது விஜய் என்றும் அவரின் ஒரு படத்தை இந்தியா வந்த போது பார்த்திருக்கிறேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: 80களில் குடும்பப் பாங்கான படங்களில் தெறிக்க விட்ட விசு… எப்படி நடந்ததுன்னு தெரியுமா?

அடுத்ததாக ரஜினியின் புகைப்படத்தை பார்த்ததும் ஓ மை தலைவா என்று அவருடைய பாணியில் கூறினார். அடுத்ததாக அஜித்தின் துணிவு பட போஸ்டரை காட்டியதும் ‘oh this is my favourite hero kamalhasan’ என்று கூறியது தொகுப்பாளரையே திகிலடைய வைத்தது. அதன் பிறகுதான் இது அஜித். மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட கோலிவுட் ஹீரோ என்று தொகுப்பாளர் சொன்னபிறகு எட்வர்ட் அப்படியா என்று கேட்டார்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் இதென்னடா அஜித்துக்கு வந்த சோதனை? விஜயை தெரிஞ்சவருக்கு அஜித்தை தெரியவில்லையே என்று வழக்கம் போல கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சர்ஜரிக்கு பிறகு அத பண்ணல.. இத செஞ்சிருந்தா நல்லா இருந்திருப்பார் – கேப்டன் குறித்து SAC உருக்கம்

Published by
Rohini