Categories: Cinema News latest news throwback stories

தம்பி ஓரமா போ!.. சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்த தனுஷ்!.. கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்…

சிவகார்த்திகேயன் சினிமாவில் வளரும்போது தனுஷை பயன்படுத்திக்கொண்டார். தனுஷ் தான் தயாரித்து நடித்த ‘3’ படத்தில் சிவகார்த்திகேயனை தன்னுடைய நணபனாக நடிக்க வைத்தார். அதன்பின் சிவகார்த்திகேயன் 2 படங்களில் நடித்துவிட்டு வந்தபோது அவரை ஹீரோவாக வைத்து ‘எதிர் நீச்சல்’ எனும் படத்தையும் தனுஷ் தயாரித்தார்.

அதேபோல், சிவகாத்திகேயனை வைத்து ‘காக்கிச் சட்டை’ படத்தையும் தனுஷ் தயாரித்தார். ஆனால், சில மனக்கசப்புகளால் தனுஷும், சிவகார்த்திகேயனும் பிரிந்துவிட்டனர். அதோடு, தனுஷுக்கு நெருக்கமாக இருந்த அனிருத்தும் சிவகார்த்திகேயன் பக்கம் போய்விட்டார். இதனால், சிவகார்த்திகேயன் மீது தனுஷ் கோபத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஒருகட்டத்தில் தனுஷை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் மாறினார்.

இதையும் படிங்க: போஸ்டர் காசு கூட வரல!.. புலம்பும் திரையுலகம்!.. வசூலில் மண்ணை கவ்விய அயலான்!..

இந்நிலையில்தான், பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் படமும், சிவகார்த்திகேயனின் அயலான் படமும் வெளியானது. இதில், யாருடைய படம் அதிக வசூலை பெறும் என்பதில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்டது. இதில், அயலான் படத்தை விட கேப்டன் மில்லர் அதிக வசூலை பெறுவதாக பரவலாக பேசப்படுகிறது.

இத்தனைக்கும் கேப்டன் மில்லர் ஒரு பக்கா, ராவான ஒரு ஆக்‌ஷன் படம். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், அயலான் படமோ ஏலியன் சம்பந்தப்பட்ட ஒரு சயின்ஸ் பிக்சன் படம். எனவே, இப்படத்திற்கு குடும்பத்துடன் ரசிகர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அளவுக்கு வசூல் பெற்றதா என்பது போகப்போக தெரியவரும்.

இதையும் படிங்க: மௌனம் சாதிக்கும் கமல்!… விஜய் சேதுபதி, யோகி பாபு பக்கம் சாய்ந்த ஹெச்.வினோத்…

ஒருபக்கம், கேரளாவில் அயலான் படம் மண்ணை கவ்வியுள்ளது. 103 தியேட்டர்களில் வெளியானது அயலான் படம். ஆனால், போஸ்டர் காசு கூட வரவில்லயாம். அதேநேரம், அதே கேரளாவில் கேப்டன் மில்லர் திரைப்படம் 2 கோடி வாங்கப்பட்டு 4 நாளில் 4 கோடி வசூல் செய்திருக்கிறது.

அதேபோல் ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாட்டு தியேட்டர்களிலும் அயலானை விட கேப்டன் மில்லருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் பொங்கல் ரிலீசில் தனுஷ் சிவகார்த்திகேயனை முந்திவிட்டார் என்றுதான் எண்ண தோன்றுகிறது.

இதையும் படிங்க: போட்டுத்தாக்கு! களைகட்டும் நெட்ஃபிளிக்ஸ்.. இந்தாண்டு ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா