Categories: Cinema News latest news

வசூலில் கலக்கும் கேப்டன் பிரபாகரன்…2வது நாளில் டபுள் ஆன கலெக்சன்

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2 தினங்களுக்கு முன் ரீ ரிலிஸானது கேப்டன் பிரபாகரன்.

இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்து அவரின் 100வது படமாக வெளிவந்த படம்தான் கேப்டன் பிரபாகரன். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போதுதான் விஜய பிரபாகரன் பிறந்தார். இதனாலயே அவருக்கு பிரபாகரன் என்று பெயரிட்டதாக சொல்லுவார்கள்.

பொதுவாகவே எந்த நடிகருக்கும் 100வது படம் என்பது தோல்வியாகவே அமைந்தது. அந்த சென்டிமென்டையும் இப்படம் தகர்த்தது. 1991ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஜய்காந்த் மறைவிற்கு பிறகு கேப்டன் பிரபாகரன் கடந்த இரு தினங்களுக்கு முன் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. சுமார் 1000 ஸ்கிரின்களில் வெளிவந்துள்ள இப்படத்தை அனைவரும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

rawther

இந்த நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி முதல் நாள் சுமார் 46 லட்சம் வசூல் ஆகியுள்ளது. இரண்டாவது நாளான நேற்று இப்படத்தின் வசூல் இரு மடங்கு ஆகியுள்ளது. அதன்படி ரூ.86 லட்சம் வசூல் ஆகியுள்ளது.

Published by
adminram