Categories: latest news television

Biggboss Tamil 8: படிச்சவங்க எப்படி நடந்துப்பாங்க… கேப்டனை ‘ரோஸ்ட்’ செய்த விசே

Biggboss Tamil: என்ன கடுப்பில் இருந்தாரோ என்னவோ கேப்டன் சத்யாவை இன்று விஜய் சேதுபதி எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுத்து விட்டார். கடந்த வாரம் இரு வீட்டினருக்கும் இடையே நடந்த பஞ்சாயத்து நீண்டுகொண்டே சென்றது.

இதில் எரிச்சல் ஆன சவுந்தர்யா இரண்டு வீட்டுக்கும் நடுவில் அமர்ந்து தர்ணா செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த விஷயத்தை கேப்டன் சத்யா டீல் செய்கிறேன் என்ற பெயரில் சவுந்தர்யா மீது தனக்கு இருந்த வன்மத்தினை தீர்த்துக் கொண்டார்.

அவருக்கு முன்னால் கொஞ்சம் அமைதியாக அறிவுரை சொன்ன சத்யா தனிமையில் வைல்டு கார்டு போட்டியாளரிடம் சென்று இப்படி நடந்துகிறா ரவுடி மாதிரி. என்ன படிச்ச பொண்ணா என்று வாய் இருக்கிறது என்பதற்காக வார்த்தைகளை விட்டுவிட்டார்.

பின்னர் ஐயோ குறும்படம் போட்டு விடுவார்களே என எச்சரிக்கை மணி ஒலிக்க நான் உங்கள பேசினது தப்பு என பொத்தாம் பொதுவாக மன்னிப்பு கேட்டு விட்டதடா தொல்லை என ஆசுவாசம் அடைந்தார். ஆனால் சமூக வலைத்தளங்களில் அவரின் பேச்சு கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

sathya

இதற்கு சத்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என சவுந்தர்யாஆர்மி விஜய் சேதுபதியை டேக் செய்து பொங்கினர். இது விஜய் சேதுபதி காதுக்கு சென்றதா? இல்லை பிக்பாஸ் எதுவும் கண்டெண்ட் இல்லை என்று அழுதாரா? என தெரியவில்லை.

சத்யாவை இந்த விவகாரத்தில் லெப்ட் ரைட் வாங்கி பொதுவில் போட்டுக் கொடுத்த விசே, பின்னர் அவரை முழு மனதோடு மன்னிப்பும் கேட்க வைத்து விட்டார். தனியாக புலம்பிய விஷயம் பொதுவில் வந்து விட்டதால் இனி சத்யாவின் நிலை பெண்களுக்கு மத்தியில் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. இதுக்கு தான் பாஸ் இஷ்டத்துக்கு பேசக்கூடாதுன்னு சொல்றது!

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini