
Cinema News
விஜயகாந்தை மறந்துபோன சிவாஜி!.. ஆனாலும் நடிகர் திலகத்துக்கு ஆதரவா நின்ன கேப்டன்!..
Published on
விஜயகாந்த் அன்புக்கும், பாசத்துக்கும் கட்டுப்பட்டவர். தன்னோடு நடிக்கிறவர்களை எல்லாம் அழைத்து விசாரிப்பார். எம்ஜிஆருக்குப் பிறகு செட்டில் உள்ள எல்லோருடனும் அன்பாகப் பேசுவது விஜயகாந்த் தானாம்.
நடிகர்திலகம் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வெளிநாட்டில் சிகிச்சை முடிந்து திரும்பவும் நடிக்க வந்தார். அப்போது நாங்கள் என்று ஒரு படத்தில் நடித்தார். ஏவிஎம் கார்டனில் டப்பிங் பேசினார். அதே நேரம் சத்ரியன் படத்திற்காக விஜயகாந்த், சுபாஷ் என எல்லாரும் அந்த செட்டில் இருந்தனர். அப்போ ஒருவர் வந்து நடிகர் திலகம் அங்கு வந்து இருப்பதை சொல்ல, விஜயகாந்த் அவரைப் பார்க்க துடித்தார்.
உடனே அங்கு சென்றார். அங்கு சுபாஷ் சிவாஜியின் காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார். அதன்பிறகு விஜயகாந்தும் வாங்கினார். அப்போது அங்கு இருந்த பிரபு ‘அப்பா கூட நீங்க நடிச்சிருக்கீங்கள்லன்னு’ கேட்டாரு பிரபு. ஆமா வீரபாண்டியன்னு ஒரு படத்துல நடிச்சிருக்கேன். உடனே பிரபு சிவாஜிகிட்ட ‘வீரபாண்டியன்ங்கற படத்துல நீங்களும், அவங்களும் சேர்ந்து நடிச்சீங்களாமேன்னு’ கேட்டார்.
VeeraPandiyan
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல ஜெமினில்ல எங்கூட நடிச்சான்னு சிவாஜி சொன்னாரு. அவருக்கு ஞாபகசக்தி குறைவா இருந்த காலகட்டம். விஜயகாந்த் நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு பரவாயில்ல… பரவாயில்லன்னு சொன்னாரு. நடிகை லட்சுமி டப்பிங் பேசிட்டு வர்றாரு. அதைப் பார்த்ததும் சிவாஜி ‘வாடி லட்சுமி’ங்கறாரு.
என்ன இங்க வந்துருக்க? சூட்டிங்கா? டப்பிங்கா?ன்னு கேட்குறாரு. லட்சுமியை கரெக்டா அடையாளம் தெரியுது. பல படங்கள்ல சிவாஜியோடு நடிச்சிருக்காங்க. அப்போது விஜயகாந்துடன் இருந்தவங்க ‘ உங்கள யாருன்னு தெரியல. நடிகைய மட்டும் கரெக்டா ஞாபகம் வச்சிருக்காரு’ன்னு சொல்ல, அதற்கு விஜயகாந்த், இந்த ஞாபகசக்தி சிலபேரை அடையாளம் வச்சிருக்கும். அதனால குறை சொல்லாதீங்க. அந்த அம்மா அவரு கூட நிறைய படம் நடிச்சிருக்கும். நம்ம ஒரே படம் தான். அதனால அவரோட ஞாபக சக்தி அதிகமா இருக்கு என்றார் விஜயகாந்த்.
நடிகர் திலகம் சிவாஜியும், விஜயகாந்தும் ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து நடித்துள்ளார்கள். அது 1987ல் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான வீரபாண்டியன். இந்தப்படத்தில் விஜயகாந்த் மணிமாறனாகவும், சிவாஜி பாண்டியாகவும் வருவார். ராதிகா, சுமித்ரா, ஜெய்சங்கர், ராதாரவி, வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...