×

மரத்தில் மோதி நொறுங்கிய கார் – பிரபல நடிகைக்கு படுகாயம்!

கன்னட சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகையான ரிஷிகா சிங் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னட சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகையான ரிஷிகா சிங் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவில் புகழ்பெற்ற வளரும் நடிகையாக உருவாகி வருபவர் ரிஷிகா சிங். கன்னட சினிமாவில் இவரது குடும்பத்தினரான சகோதரர் ஆதித்யா நடிகராகவும், தந்தை ராஜேந்திர சிங் பாபு இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர் கன்னட சினிமாவில் கண்டீரவா எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரையில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரிஷிகா ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று வந்த ரிஷிகா சிங்கின் கார் கட்டுப்பாட்டை மீறி பெங்களூர் அருகே மவல்லிபுரா எனும் பகுதியில் மரம் ஒன்றின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.

இதனால் காரின் முன்பகுதியில் இருந்த ரிஷிகாவுக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் முழுவதும் குணமாகி வீடு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News