×

ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே... போலிசிடம் தொக்கா மாட்டிய நடிகை....

கருணாஸ் நடிப்பில் தமிழில் 2010-ல் வெளியான திரைப்படம் அம்பா சமுத்திரம் அம்பானி.

 
60c1c1e80aeb8

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீச்சயமான நடிகை நவ்னீத் கவுர் ராணா (35). தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டதுடன் அதில் வெற்றியும் பெற்றார். இப்படி மிக இளவயது எம்பியாக வலம்வந்த நவ்னீத் கவுரிடம் 2013-ல் பெறப்பட்ட மோச்சி என்கிற பட்டியலின சமூக சாதி சான்றிதழ் உள்ளது.

ஆனால் இந்தச் சான்றிதழ் போலியாக பெறப்பட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழ, இந்த குற்றச்சாட்டை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதிகள் ஆர்டி தனுக்கா மற்றும் வி.ஜி. பிஸ்த், நடிகை நவ்னீத் கவுரின் சாதி சான்றிதழ் 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சரிபார்ப்பு செய்யப்பட்டதன் அடிப்படையில் தற்போடு ரத்து செய்து உத்தரவிட்டனர். அதுமட்டுமல்லாமல், அவருக்கு இந்த போலி சான்றிதழால், ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளதாகவும் 6 வாரத்துக்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி பேசிய நவ்னீத் கவுர், நீதிமன்ற  உத்தரவை, தாம் மிகவும் மதிப்பதாகவும், அதே சமயம் இந்த உத்தரவுக்குஎதிராக மேல்முறையீடு செய்யப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நவ்னீத் கவுரின் கணவர் தான் எம்எல்ஏ ராணா. 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அன்று அமராவதியில் இந்த தம்பதி திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் நவ்னீத் கவுர், மோச்சி எனும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்று அனைவராலும் பரவலாக அறியப்பட்டது.  அப்போதிலிருந்தே நவ்னீத் கவுருக்கு எதிராக சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் நவீனா கவுரின் சாதி குறித்து சந்தேகம் எழுப்பியதும், இது தொடர்பாக நவ்னீத் மீது வழக்கும் தொடரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News