×

விக்ரம் ரசிகர் மன்றத்தில் ஜாதிப் பிரச்சனை… அலறி அடித்து வெளியிட்ட அறிக்கை!

நடிகர் விக்ரம் ரசிகர் மன்றத்தில் இருக்கும் நிர்வாகிகள் சிலருக்கு இடையே ஜாதி மத மோதல் எழுந்துள்ளதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

 

நடிகர் விக்ரம் ரசிகர் மன்றத்தில் இருக்கும் நிர்வாகிகள் சிலருக்கு இடையே ஜாதி மத மோதல் எழுந்துள்ளதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

தமிழ் சினிமாவில் அதிக அளவில் ரசிகர் மன்றங்களைக் கொண்டுள்ள நடிகர்களில் நடிகர் விக்ரம்மும் ஒருவர். அவருக்கு வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் அதிக ரசிகர்க் கூட்டம் உண்டு. ஏனென்றால் அவர் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம். இந்நிலையில் அவர் ரசிகர் மன்றத்தில் இருக்கும் சிலருக்கு இடையே ஜாதிய ரீதியிலான மோதல் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ரசிகர் மன்றத்தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘சியான் விக்ரம் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் எந்தவித ஜாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்து செயல்படக்கூடாது. மதம், ஜாதி மற்றும் அரசியல் சம்மந்தமில்லாமல் அண்ணன் சியான் விக்ரம் அவர்களின் ரசிகர்கள் என்ற எண்ணத்தில் மட்டும் ரசிகர்கள் செயல்பட வேண்டும். இதற்கு மாறாக மதம், ஜாதி மற்றும் அரசியல் சம்பந்தப்படுத்தி அதன் தலைவர்களை சம்பந்தப்படுத்தும் ரசிகர்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் செய்திகள் நமது கொள்கைகளுக்கு எதிரானவை மற்றும் கடும் கண்டனத்துக்கு உரியது. ‘ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News