×

இவங்க பேசியே சாவடிப்பாங்களே! பிக்பாஸ் வீட்டுக்கு எண்ட்ரி கொடுத்த பிரபலம் (வீடியோ)

 

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது 4வது சீசனை எட்டியுள்ளது. இந்த முறையும் கமலஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி துவங்கி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சண்டை, சச்சரவு, போட்டி, வாக்குவாதம், நடன நிகழ்ச்சிகள் என நிகழ்ச்சி போரடிக்காமல் போய் வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு புது வரவாக டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவை பிக்பாஸ் களம் இறக்கியுள்ளார். அவர் எப்போதும் வளவளவென பேசிக்கொண்டே இருப்பார். எனவே, இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், நிகழ்ச்சி துவங்கி 10 நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அதற்குள் புது போட்டியாளரா?.. அப்ப இன்னும் ஸ்கிரிப்ட் ரெடி ஆகலையா...வேற ஆளே கிடைக்கலியாடா உங்களுக்கு....’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News