×

சோளமுத்தா போச்சா!...தமிழக அரசுக்கு செக் வைத்த மத்திய அரசு - மாஸ்டர் படம் வெளியாகுமா?....

 

விஜயின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகவுள்ளது.

எனவே 50 சதவீத இருக்கைக்கு அனுமதி என்பதை மாற்றி 100 சதவீதம் அனுமதிக்க வேண்டும் என நடிகர் விஜய் நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தினார். நடிகர் சிம்பு டிவிட்டரில் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, சமீபத்தில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இது விஜய், சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

master

இந்நிலையில், தற்போது இதற்கு மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 100 சதவீதம் அனுமதி அளித்திருப்பது விதிமீறல் என என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாலர் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளை பின்பற்றி மாற்று உத்தரவை பிறப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், தியேட்டர்களில் ஒரு இருக்கை இடைவெளி விட்டே ரசிகர்கள் அமர வைக்கப்படுவார்கள். அப்படி நடந்தால் போட்ட காசை எடுப்பது கஷ்டம். இதை உணர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிடுமா என்பது தெரியவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கும் ,சிம்பு ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News