×

காதலரை கரம் பிடித்த நடிகை... டும் டும் டும் வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!

கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து பல பிரபலங்களும் தங்களது திருமணங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டிக்கு தற்போது திருமணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. 

 

விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. இதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்தார். இத்தொடரின் மூலம்  இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராகேஷ் சமலா என்பவருடன் சைத்ராவுக்கு திருமண நிகழ்ச்சி  நடைபெற்றுள்ளது. 

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியன. இதை கண்ட ரசிகர்கள், ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வர, இவர்களின் திருமண வீடியோவும் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News