யுவன் இசை அள்ளுது!.. சக்ரா படத்தில் ‘ஹர்லா ஃபர்லா’ பாடல் வரிகள் வீடியோ...
Mon, 4 Jan 2021

‘ஆக்ஷன்' படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் படம் “சக்ரா”. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
விஷாலின் விஷால் ஃப்லிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே சக்ரா படத்தின் ’ட்ரெய்லர் முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்ற ஹர்லா ஃபர்லா பாடல் வரிகள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.