×

சாதி பெயரை சொல்லி சக போட்டியாளரை கிண்டல் செய்த மொட்டை சக்ரவர்த்தி....

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது தொடங்கியிருக்கும் நான்காவது சீசன் மட்டும் விதிவிலக்கா என்ன?. 
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். சினிமா டிவி துறைகளில் பிரபலமாக இருக்கும் பலர் போட்டியாளர்களாக வந்திருக்கிறார்கள்.

சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவரை வரவேற்ற பாலாஜி முருகதாஸை பார்த்து என்ன ஜாதி எனக் கேட்டார் என ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது.

பாலாஜி முருகதாஸ் 'நாயர்' என பதில் அளித்து இருக்கும் வீடியோவையும் தற்போது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். இதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியை தாக்கி பதிவிட்டு வருகிறார்கள்.

சுரேஷ் சக்ரவர்த்தி ஏற்கனவே பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் தனக்கு சகிப்புத் தன்மை சுத்தமாக கிடையாது என்றும் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பேன் என்றும் வெளிப்படையாக கூறி இருந்தார் அதனால் அவர் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல விஷயங்களையும் பார்த்து கோபப்பட்டு பேச வாய்ப்பு இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News