Connect with us
சந்திரபாபு

Cinema News

அந்த மூடில் இருக்கும் போது சந்திரபாபு ஓவரா பேசுவார்… என்னப்பா இப்படி?

சந்திரபாபு என்றாலே திரையுலகில் அவருக்கு இருந்த புகழிற்கு அளவு அதிக அளவிலான சர்ச்சையினையும் சந்தித்து வைத்து இருந்தார்.

எம்.ஜி.ஆர் முன்னணி நாயகனாக நடித்த படங்களில் காமெடியனாக சந்திரபாபு நடித்திருப்பார். தியேட்டர்களில் சந்திரபாபு சீன்களுக்கு விசிலும் கைதட்டலும் அதிகம் கிடைத்திருக்கிறது. இதனால் சந்திரபாபு பல இடங்களில் எம்.ஜி.ஆரினையே சீண்டி இருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்கள் யார் என்ற கேள்விக்கு, நானும் சிவாஜி கணேசனும் என சந்திரபாபு ஒருமுறை கூறியது பலருக்கு அப்போதே அவர் மீதான விமர்சனங்களை அதிகப்படுத்தியது.

சந்திரபாபு

சந்திரபாபு

ஆனால், அந்த காலத்தில் நிறைய படங்களில் நடித்து வந்தவர் சந்திரபாபு. அவர் கட்டிய பங்களாவில் காரில் சென்று முதல் மாடியில் இறங்குபடியான அமைப்பு என அவர் நிலைமை நல்ல நிலையில் இருந்தது. இருந்தும் மாடி வீட்டு ஏழை என ஒரு படத்தினை தயாரிக்க எண்ணினார். ஆனால் அப்படத்தில் எம்.ஜி.ஆருக்கும் இவருக்கும் இருந்த முன் பகையால் அப்படம் பெரிய கடனில் இவரினை இழுத்துவிட்டது.

இப்படி பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான சந்திரபாபு வீட்டில் பனியன் இல்லாத வெள்ளை நிற முழுக்கை சட்டை மற்றும் வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கியை தான் பிடித்தமாக அணிந்து கொள்வாராம். சோபாவில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்தப்படி இருக்கும் போது பாடல் கேட்பார். அப்போது நடனம் ஆடுவது அவருக்கு பிடிக்கும். தன்னுடன் இருப்பவர்களையும் நடனம் ஆட அழைப்பாராம்.

சந்திரபாபு

சந்திரபாபு

அவரின் நடன மூடினை கெடுக்கும் வகையில் நடனம் ஆடுபவர்கள் தவறாக ஆடக்கூடாதாம். அப்படி செய்தால் வாய்க்கு வந்ததை திட்டி விடுவாராம். இதற்கு பயந்தே சிலர் அவர் நடனம் ஆடிக்கொண்டு இருந்தால் அந்த இடத்தில் இல்லாமல் சென்று விடுவார்களாம்.

Continue Reading

More in Cinema News

To Top