Connect with us
chandira babu

Cinema News

நான் பிளாட்பாமுக்குதான் போவேன்!.. தன் எதிர்காலத்தை முன்பே கணித்த சந்திரபாபு…

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகர் சந்திரபாபு. வித்தியாசமான உடல் மொழி, நடனம் என ரசிகர்களை கவர்ந்தவர். திறமையான பாடகரும் கூட. இவர் நடித்த பல திரைப்படங்களில் ஒரு பாடல்களை பாடியவர். இவரின் காமெடி காட்சிகளுக்கு என்றே ரசிகர்கள் இருந்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் பல திரைப்படங்களில் சந்திரபாபு நடித்துள்ளார்.

சந்திரபாபு

சந்திரபாபு

சினிமா இவருக்கு எல்லாவற்றையும் கொடுத்தாலும் சொந்த வாழ்வில் மகிழ்ச்சியை காணாதவர். ஆசை ஆசையாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால்,முதலிரவு அன்றே தான் இன்னொருவரை காதலிப்பதாக அந்த பெண் கூற அது சந்திரபாபுவுக்கு பேரிடியாக இருந்தது. மனம் உடைந்து போன சந்திரபாபு மனைவியை அவரின் காதலுனடனேயே அனுப்பிவிட்டு கடைசி வரை தனிமையில் வாழ்ந்தார். மேலும் கடைசி காலத்தில் சினிமாவில் வாய்ப்புகளும் இல்லமால், மது பழக்கத்திற்கும் அடிமையாகி ஆதரவின்றி உயிரிழந்தார்.

சந்திரபாபு

சந்திரபாபு

இந்நிலையில், சீரியல் மற்றும் சினிமா நடிகரான ஏ.ஆர் சீனிவாசன் சந்திரபாபுவின் இளமை காலம் குறித்து பல தகவல்களை யுடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார். நான் சிறுவனாக இருக்கும்போது ஜெமினி, சந்திரபாபு எல்லாம் ஓரிடத்தில் சந்திப்பார்கள். நானும் அங்கு செல்வேன். அவர்கள் பேசிமுடித்த பின் சைக்கிளின் பின்னால் சந்திரபாபுவை ஏற்றிக்கொண்டு போய் அவரின் வீட்டில் விடுவேன்.

srinivasan

சைக்கிளில் செல்லும்போது சத்தமாக பாடிக்கொண்டே வருவார் சந்திரபாபு. வீட்டை திறந்து யாரது பாடுவது என பலரும் பார்க்கும்படி பாடுவார். யார் பார்க்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் கவலையே படமாட்டார். ஒருமுறை என்னிடம் ‘சந்திரபாபு ஃபிளாட்பாமிலிருந்து சினிமாவுக்கு வந்தான். மீண்டும் சந்திரபாபு அதே ஃபிளாட்பாமுக்கு போவான்’ என என்னிடம் சொன்னார். அவர் ஏன் என்னிடம் அப்படி சொன்னார் என இப்போது வரை எனக்கு புரியவில்லை’ என அவர் கூறியிருந்தார்.

சந்திரபாபுவுக்கு தன் முடிவு பற்றி இளமையாக இருக்கும்போதே தெரிந்தது ஆச்சர்யமான ஒன்றுதான்!..

இதையும் படிங்க: வடிவேலு பட விழாவில் திடீரென உள்ளே நுழைந்த விஜய்… ஆனால் இதில் சோகம் என்னென்னா?

Continue Reading

More in Cinema News

To Top