Categories: Cinema News latest news throwback stories

எம்.ஜி.ஆர் சிவாஜி ஜெமினி ஆகியோரை குறித்து வாய்க்கு வந்தபடி பேசிய சந்திரபாபு… என்ன இருந்தாலும் இப்படியா?

சந்திரபாபு  தமிழ் சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகராக திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் ஹீரோக்களாக உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் சந்திரபாபு காமெடியனாக உச்சத்தில் இருந்தார். அவர் காமெடியனாக மட்டுமல்லாது சிறந்த பாடகராகவும் நடன கலைஞராகவும் திகழ்ந்தார்.

Chandrababu

இவ்வாறு புகழ் பெற்று விளங்கிய சந்திரபாபு, தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவராகவும் இருந்தார். இந்த நிலையில் சந்திரபாபுவிடம் பத்திரிக்கையாளர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரை குறித்து கருத்து கூறும்படி கேட்டனர். அதற்கு பதிலளித்த சந்திரபாபு என்ன கூறினார் தெரியுமா?

MGR

“எம்.ஜி.ஆர் கோடம்பாக்கத்தில் ஒரு மருத்துவமனையை கட்டுவதாக இருக்கிறார். அந்த மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் கம்பவுண்டராக வேலை பார்க்கலாம்” என்று கூறினாராம்.

Sivaji Ganesan

அடுத்ததாக சிவாஜியை குறித்து பேசுகையில், “சிவாஜி ஒரு பெரிய நடிகர். ஆனால் அவரை சுற்றி ஒரு காக்கா கூட்டம் இருக்கிறது. அந்த காக்கா கூட்டத்தை எல்லாம் விரட்டியடித்தால்தான் அவர் தேறுவார்” என கூறினாராம்.

Gemini Ganesan

அதன் பின் ஜெமினி கணேசனை குறித்து கூறியபோது, “ஜெமினி கணேசன் எனது ஆதிகால நண்பன். அந்த சமயத்தில் தாய் உள்ளம் என்ற ஒரு படத்தில்  அவன் நடித்துக்கொண்டிருந்தான். நகைச்சுவை காட்சியில் எப்படி நடிப்பது, காதல் காட்சியில் எப்படி நடிப்பது, பேத்தாஸ் காட்சியில் எப்படி நடிப்பது எல்லாம் அவனுக்கு நான் நடிச்சி சொல்லிக்கொடுப்பேன். அடேய் அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா, இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா, நீ போன ஜென்மத்துல வட்டிக்கடை வச்சிருப்படா” என கூறினாராம்.

Arun Prasad
Published by
Arun Prasad