Chandramukhi2: ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் இணைந்து நடித்திருக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் ரிலீஸே இன்னும் நடக்காத நிலையில் மூன்றாம் பாகமும் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் தான் சந்திரமுகி. பல நாட்களாக வெற்றிக்கு இப்படத்தின் கதை, காமெடி, பாடல்கள் என பலவகையில் பாசிட்டிவ் விமர்சனத்தினையே பெற்றது. அதிலும் வடிவேலுவின் காமெடி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: அஜித் ஃபேன்ஸை மிஞ்சிய தளபதியன்ஸ்… அதுவா? இதுவா? எதையாது சொல்லுங்களேன்பா… எக்ஸில் ஒரே ரவுசா கிடக்கு!
இப்படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி இரண்டை பி.வாசுவே இயக்கி வருகிறார். ஆஸ்கார் நாயகன் கீரவாணி இசையமைப்பு செய்யும் இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். முதல் பாகத்தில் இருந்து 18 வருடம் கழித்து இந்த பாகம் நடைபெறுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்தினை செப்டம்பர் 15ல் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் விஎஃப்எக்ஸ் தாமதத்தால் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்தது. ஆனால், தெலுங்கு ப்ரோமோஷனில் கலந்து கொண்ட பி.வாசு 480 ஷாட்டுகள் கொண்ட புட்டேஜ் மிஸ் நான்கு நாட்கள் கழித்து கிடைச்சது.
இதுவே படத்தின் ரிலீஸ் தாமதத்திற்கு காரணம் என்றார். இந்நிலையில் சந்திரமுகி 2 நாளை திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகம் ஹிட்டானால் அடுத்த பாகமும் உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பல மாசம் ஆகியும் கிளைமேக்ஸ் வரல!.. காக்க வைத்த இயக்குனர்!.. தூக்கியெறிந்த அஜித்!..
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…