Categories: Cinema News latest news

கழுத குடிசையா இருந்தாலும் பரவாயில்லை!.. சந்திரமுகி 2வை காணும் மக்கள்.. 2வது நாள் இவ்ளோ வசூலா?..

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இந்த வாரம் வெளியான நிலையில் அதற்கு போட்டியாக வேறு எந்த பெரிய படங்களும் வெளியாகாத நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர். அதன் விளைவாக முதல் நாளை விட இரண்டாவது நாள் வசூல் சற்றே கூடி இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த வாரம் வியாழக்கிழமை தமிழில் சந்திரமுகி 2, இறைவன் மற்றும் சித்தா உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இதில் சித்தார்த்தின் சித்தா மட்டுமே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையிலும், அந்தப் படத்திற்கான வரவேற்பு பெரிதாக இல்லை.

இதையும் படிங்க: புடவைக்கே இத்தனை ஆயிரமா?‌..‌ ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் ஷாப்பிங் வீடியோ..

ஜெயம் ரவி இறைவன் திரைப்படம் முதல் நாளே ரசிகர்களை இம்சை பண்ணிய நிலையில், இரண்டாம் நாள் வசூல் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தை பார்த்து வளர்ந்த ரசிகர்கள் சந்திரமுகி 2 என அந்த பெயரை நம்பி தியேட்டருக்கு சென்ற நிலையில், ரசிகர்களை ராகவா லாரன்ஸ், வடிவேலு எல்லாம் சும்மா வச்சு செய்து வருகின்றனர். பேயாக நடிக்கிறேன் என கங்கனா ரனாவத் தனது முழு சுயரூபத்தையே காட்டி விட்டார் என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல்: பொங்கி எழுந்த ஞானம்….பரிதவிக்கும் ரேணுகா… ஆறுதல் கூறும் நந்தினி…

ஆனாலும், இந்த வாரம் ரசிகர்களின் பெரிய வீக்கெண்டை கொண்டாட ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆப்ஷனாக சந்திரமுகி 2 திரைப்படம் உள்ள நிலையில், குழந்தைகளுடன் அந்த படத்தை குடும்பங்கள் சென்று பார்த்து வருகின்றன.

அதன் காரணமாக முதல் நாளில் 5 கோடி ரூபாயாக இருந்த வசூல், இரண்டாம் நாளில் 7.5 கோடி உயர்ந்து ஒட்டுமொத்தமாக 12.5 கோடி முதல் 13 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், சந்திரமுகி படத்தின் பட்ஜெட் அளவிற்கு இந்த படம் கலெக்‌ஷனை அள்ளுமா? என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.

சனி, ஞாயிறு மற்றும் திங்கள் விடுமுறை இருப்பதால் சந்திரமுகி 2 தப்பிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Saranya M
Published by
Saranya M