Categories: Cinema News latest news

எப்போ கூப்பிட்டாலும் வரணும்.! ‘அந்த’ இளம் நடிகைக்கு கடிவாளம் போட்ட லாரன்ஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. சென்னையில் குறிப்பிட்டு திரையரங்கில் மட்டும் 800 நாட்கள் தாண்டி ஓடி சாதனை படைத்தது. தற்போதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தையும் வாசு தான் இயக்குகிறார். ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் – இயக்குனர் ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

சந்திரமுகியில் பெரிதாக பேசப்பட்ட வேட்டையன் எனும் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் சந்திரமுகி எனும் பெண் கதாபாத்திரம்.

முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவியை அழைத்துள்ளார்கள், பிறகு த்ரிஷா, தற்போது வெளியான தகவலின்படி லட்சுமி மேனன் தான் இறுதியாக கமிட்டாகி உள்ளாராம்.

இதையும் படிங்களேன் – விஜய் – அஜித்திடம் இல்லாத திறமை சிவகார்த்திகேயனிடம் உள்ளதாம்… பலே கில்லாடி இந்தாளு…

ஏன் எதற்கு என்று காரணம் விசாரித்தால், லாரன்ஸ் அடுத்தடுத்து இரண்டு மூன்று திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளாராம். அந்த திரைப்படங்களின் சூட்டிங்களிலும் அவ்வப்போது கலந்து கொள்வாராம். ஆதலால் பெரிய நடிகைகள் என்றால் தாங்கள் கூப்பிட்ட நேரத்துக்கு சூட்டிங்  வர மாட்டார்கள். அதுவே லட்சுமி மேனன் போன்ற இளம் நடிகை என்றால் சூட்டிங் எப்போது என்றாலும் தவறாமல் கலந்து கொள்வார்கள். ஆதலால் லட்சுமிமேனனை இந்த படத்தில் ஹீரோயினாக மாற்றி விட்டோம் என்கிறதாம் சந்திரமுகி 2 படக்குழு.

Manikandan
Published by
Manikandan