rajini
படையப்பா படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிக்கு பெரிய வசூலைப் பெற்று தந்த படமாக சந்திரமுகி படம் அமைந்தது. முதலில் ரஜினிக்கு இந்த படம் செட் ஆகுமா என்று பல பேர் யோசித்த நேரம். ஆனாலும் துணிந்து நடித்து வெற்றியும் கண்டார் ரஜினி.
jothika
ஆனாலும் முதல் நாளில் நம்பிக்கையே இல்லாமல் படக்குழு போக போக படம் பிச்சுக்கிட்டு ஓடியது. எங்கு பார்த்தாலும் ஹவுஸ்ஃபுல் என வசூல் மழை பெய்தது. தெலுங்கு படத்தின் ரீமேக் தான் சந்திமுகி. இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார்.
இதையும் படிங்க : நடிப்புக்கு முழுக்கு போட்ட திரிஷா!.. கோபத்தில் லண்டனுக்கு கிளம்பிய சம்பவம்.. சீண்டினது யாருனு தெரியுமா?..
மேலும் பிரபு, ஜோதிகா, வடிவேலு , நாசர் என ஒரு பெரிய பட்டாளமே நடித்து வெளியான படம் தான் சந்திரமுகி. இந்த படத்தின் உயிர் மூச்சாக கருதப்பட்டதே அந்த பாடல் தான். ரா..ரா..சரசுக்கு ரா.ரா என்ற பாடல் தான். இந்த பாடலுக்கு நடன இயக்குனராக இருந்தவர் கலா மாஸ்டர்.
rajini2
முதலில் இந்த பாடலுக்கு கலா மாஸ்டர் அவரே ஃபுல் டான்ஸையும் ஆடி காட்டியிருக்கிறார். அதை பார்த்த எல்லாரும் கண்டிப்பாக இதை ஜோதிகா ஆடமாட்டார். அவரால் கண்டிப்பாக ஆடவும் முடியாது என்று சொல்லியிருக்கின்றனர். ஆனாலும் கலா மாஸ்டர் ஜோவை ஆட வைப்பது என் பொருப்பு என்று சொல்லி
ஜோவை ஆட வைத்திருக்கிறார். ஜோதிகாவும் முதலில் தயங்கினாராம். அதன் பின் ரிகர்ஷல் எல்லாம் முடிந்து கடைசியில் பிச்சி எடுத்திருப்பார். எல்லாம் ஓகே ஆனதும் ரஜினியும் வந்து கேட்டாராம், எல்லாம் சரியாக வந்திருக்கிறதா? அவங்களும் சரியாக பண்ணினாங்களா? என்று.
jyothika
கலா மாஸ்டர் சூப்பராக வந்திருக்கிறது என்று சொன்னபிறகு தான் ரஜினிக்கே பெருமூச்சு வந்திருக்கிறது. அதன் பின் எடிட்டிங்கில் போய் பார்த்த பிறகு தான் தன் நடனத்தை பார்த்து கலா மாஸ்டரை கட்டி அணைத்து கொண்டு ஜோதிகா அழுதுவிட்டாராம்.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…