Categories: Cinema News latest news

இமயமலை சித்தர் சொன்ன மந்திரம்… சந்திரமுகியில் டிரெண்டான “லகலகலக” வார்த்தை வந்தது இப்படித்தான்…

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான “சந்திரமுகி” திரைப்படம் காலம் போற்றும் மாபெரும் வெற்றியாக அமைந்தது. குறிப்பாக அத்திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடி புதிய சாதனை படைத்தது.

Chandramukhi

பாபா படுதோல்வி

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “பாபா” திரைப்படம் வணிக ரீதியாக படுதோல்வியடைந்தது. மகா அவதார் பாபாஜியின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் ரஜினிகாந்த். ஒரு நாள் பாபாஜியின் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தபோது ஒரு ஒளிவட்டம் தோன்றியதாம். அந்த ஒளிவட்டம் கொடுத்த பரவசத்தால் ரஜினிகாந்த் எழுதிய கதைதான் பாபா. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் படுதோல்வியடைந்ததால் ரஜினிகாந்த் மிகவும் நொந்துபோனார்.

Baba

நான் ஒரு குதிரை..

“பாபா” திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து “ரஜினிகாந்த்தின் சகாப்தம் முடிந்தது, இனி அவரால் எழுந்திருக்கவே முடியாது” என்றெல்லாம் பத்திரிக்கைகளில் எழுத தொடங்கினர். ஆனால் அதன் பின் “சந்திரமுகி” திரைப்படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து ஒரு விழாவில் பேசிய ரஜினி “நான் யானை இல்ல, குதிரை. விழுந்ததும் சடார்ன்னு எழுந்திடுவேன்” என பத்திரிக்கைகளில் வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

ஹாரர் படத்தில் ரஜினி!

“சந்திரமுகி” திரைப்படம் ஒரு பேய் திரைப்படம் என்று கேள்விப்பட்ட ரசிகர்கள், இது போன்ற படங்கள் எல்லாம் ரஜினிக்கு செட் ஆகுமா என நினைத்தனர். மேலும் ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் “சந்திரமுகி படத்திற்கு முதல் வாரத்தில் வரவேற்பு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் அதன் பின் வரவேற்பு பல மடங்கு எகிரும்” என கூறியிருந்தார். அவர் கூறியபடியே நடந்தது. அதாவது “சந்திரமுகி” திரைப்படத்திற்கு முதல் வாரத்தில் வரவேற்பு இல்லை. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து அமோக வரவேற்பு இருந்தது.

Chandramukhi

விட்டதை பிடிக்கனும்

“பாபா” திரைப்படத்தின் தோல்வியால் வருத்தமடைந்த ரஜினிகாந்த், தனது அடுத்த திரைப்படத்தில் நாம் யார் என காட்டவேண்டும் என நினைத்தார். அதன் படி மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்த கதைதான் சந்திரமுகி.

P.Vasu

கன்னடத்தில் வெளிவந்திருந்த “ஆப்தமித்ரா” திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், உடனே சிவாஜி புரொடக்சன் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு  “பி.வாசுதான் எனது அடுத்த படத்தை இயக்குகிறார்” என கூறினாராம். “ஆப்தமித்ரா” திரைப்படத்தை பி.வாசுதான் இயக்கியிருந்தார். அத்திரைப்படத்தின் ரீமேக்தான் சந்திரமுகி (அதே போல் மலையாளத்தில் வெளிவந்திருந்த “மணிச்சித்ரதாழு” திரைப்படத்தின் ரீமேக்தான் “ஆப்தமித்ரா”)

லகலகலக ரகசியம்

பாபாஜியின் பக்தரான ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலைக்கு செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் ரஜினிகாந்த் இமயமலையில் தியானம் செய்துகொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு சித்தர் “லகலகலக” என வானத்தை பார்த்து கத்தினாராம். அப்படி அவர் கத்தியதை நினைவுப்படுத்தி பார்த்த ரஜினிகாந்த், சந்திரமுகியில் வேட்டையன் கதாப்பாத்திரம் இந்த வார்த்தையை சொன்னால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம்.

இதையும் படிங்க: சிவாஜி கணேசனுக்கு காமெடி வராதா?… நடிகர் திலகத்தை ஓரங்கட்டிய என்.எஸ்.கே…

Chandramukhi

அடுத்த நாள் பி.வாசு ரஜினிகாந்த்தின் வீட்டிற்குச் செல்ல அப்போது ரஜினிகாந்த், பி.வாசுவிடம் “லகலகலக” என ஸ்டைலாக பேசி நடித்துக்காட்டினாராம். அதனை பார்த்த பி.வாசுவுக்கு புல்லரித்துப்போனதாம். இவ்வாறுதான் “லகலகலக” என்ற வார்த்தையை “சந்திரமுகி” படத்தில் பயன்படுத்தினார்களாம். “லகலகலக” வார்த்தை எந்தளவுக்கு பிரபலமாக ஆனது என்பதை நம்மில் பலர் அறிவோம்.

Arun Prasad
Published by
Arun Prasad