×

அவங்க வந்தாங்க.. எல்லாம் முடிஞ்சுப்போச்சு.. சித்ரா ஆவியுடன் பேசிய ஆவி நிபுணர்....

 

சில நாட்களுக்கு முன், பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பான அவரின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மரணம் கொலை எனவும் தற்கொலை எனவும் செய்திகள் மாறி மாறி பரவி வருகிறது.

இந்நிலையில், ஆவிகளுடன் பேசி அவர்களின் மரணம் பற்றிய தகவலை வெளியிட்டு வரும் பிரபல ஆவி நிபுணர் சார்லி சிட்டண்டன் சித்ரா ஆவியிடம் பேசியதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அப்போது, உங்கள் மரணம் எப்படி நிகழ்ந்தது என அவர் கேட்க ‘என்னால் கூற முடியாது..  அது மிகவும் மோசமானது... அவர்கள் வந்தார்கள்...எனக்கு அன்பு வேண்டும்’ என சித்ரா பேசுவது அதில் பதிவாகியுள்ளது. உங்கள் ரசிகர்களுக்கு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என அவர் கேட்க ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என அவர் கூறுகிறார்.

ஆவி நிபுணர் சார்லி ஏற்கனவே, சுஷாந்த் ஆவியுடன் பேசி பரபரப்பான தகவல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News