Categories: Cinema News latest news

வந்து சேர்ந்தது..! அதுவும் லிட்டில் சூப்பர் ஸ்டார் பக்கத்தில்..மகிழ்ச்சியில் சார்மிங் ஹீரோ..

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஸ் கல்யாண். சிந்து சமவெளி படத்தில் அமலாபாலுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

இதன்பின் பொறியாளன், வில் அம்பு என பல படங்களில் நாயகனாக நடித்தார்.அந்தப்படங்கள் எதுமே மக்களிடம் நல்ல பெயரை இவருக்கு பெற்றுத்தரவில்லை. அதன் பின் விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹரிஸ் கல்யாண் வெற்றிப்பாதையை நோக்கி பயணித்தார். நடித்த படங்கள் எல்லாமே ஓரளவுக்கு ஹிட் அடித்தது.

இதனிடையில் இவர் நடித்த ஓ மணப் பெண்ணே படத்திற்காக 2021ஆம் ஆண்டிற்கான ஃபேவரைட் ஹீரோ விருதையும் மற்றொரு படமான கற்ககசடற படத்திற்காக ஆன்டி ஹீரோ விருதையும் தட்டிச் சென்றுள்ளார். அதுவும் நடிகர் சிம்பு கையால் இந்த விருதை பெற்றுள்ளார்.

மேலும் உங்களுக்காக: முட்டி நிக்கும் முன்னழகு..! நின்னு காட்டிய யாஷிகா ஆனந்த்

இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini