உன் சிறப்பு நாளில் நடந்த சிறப்பு கொண்டாட்டங்கள்… நடிகையின் வாழ்த்து செய்தியால் கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்கள்

 
உன் சிறப்பு நாளில் நடந்த சிறப்பு கொண்டாட்டங்கள்… நடிகையின் வாழ்த்து செய்தியால் கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்கள்

தென்னிந்தியத் திரையுலகின் எவர்கிரீன் நாயகி திரிஷா நேற்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

தென்னிந்தியத் திரையுலகின் முக்கிய நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். லேசா லேசா படத்தில் அறிமுகம் ஆகி கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார். தற்போது கூட கமல்ஹாசன், சிம்பு, சித்தார்த் என முன்ன்ணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார்.

திரையுலகிற்கு வந்து இத்தனை ஆண்டும் ஆகியும் திரிஷா கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக விஜய் மனைவி சங்கீதா விவகாரத்தில் இவரை இணைத்துச் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் நடிகை திரிஷா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். திரிஷாவின் பிறந்த நாளுக்கு அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான ஷார்மி கௌர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வாழ்த்துப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உன் சிறப்பு நாளில் நடந்த சிறப்பு கொண்டாட்டங்கள்… நடிகையின் வாழ்த்து செய்தியால் கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்கள்

திரிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ஷார்மி பதிவிட்டுள்ளதாவது:

உன் சிறப்பு நாளில் சிறப்பு கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. நீ ஒரு அதிர்ஷ்டசாலி. இந்த பிறந்தநாள் வரலாற்றில் ஒரு வெற்றி நாளாகப் பதிவு செய்யப்படும். நான் எப்போதும் சொல்வது போல, பொறுமையும் விடாமுயற்சியும்தான் இதற்கு காரணம். என் செல்லப் பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வெளியான 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. விஜய்யின் நெருங்கிய நண்பராகவும், லியோ உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து நடித்தவருமான திரிஷாவின் பிறந்தநாளும் அதே நாளில் அமைந்ததால், ஷார்மி இதனை வரலாற்றில் ஒரு வெற்றி நாள் எனக் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் விஜய் பெற்ற வெற்றிக்கும், த்ரிஷாவிற்கும் என்ன தொடர்பு என்று ரசிர்கள் குழம்பிதான் போய் உள்ளனர்.

From Around the web