×

நாளை வெளியாகவிருந்த படத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை!

நாளை வெளியாக இருந்த சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருந்த ’நாடோடிகள் 2’ என்ற திரைப்படத்திற்கு சென்னை ஐகோர்ட் திடீரென தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

நாளை வெளியாக இருந்த சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருந்த ’நாடோடிகள் 2’ என்ற திரைப்படத்திற்கு சென்னை ஐகோர்ட் திடீரென தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சசிகுமார், அஞ்சலி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கியிருந்த ’நாடோடிகள் 2’என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது. இருப்பினும் இந்த படத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் இந்த படம் வெளியாகாமல் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்து ரிலீஸ் தேதி ஜனவரி 31 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கினர்

இந்த நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் திடீரென சற்று முன் சென்னை ஐகோர்ட் இந்த படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தர்விட்டுள்ளது. இந்த படத்தின் தமிழகம் மற்றும் புதுவை ரிலீஸ் உரிமையை பெற தன்னிடமிருந்து ரூபாய் 3.5 கோடி ரூபாய் தயாரிப்பாளர் பெற்றதாகவும் ஆனால் வேறு ஒருவருக்கு இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை கொடுத்துவிட்டதால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் எப்எம் பைனான்ஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையை இன்று நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை இந்த படம் வெளியாக வாய்ப்பில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

From around the web

Trending Videos

Tamilnadu News