×

கன்னி தன்மை பத்தி கேள்வி கேட்டு கம்பி எண்ணும் பிரபல யூடியூப் VJ!
 

பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட தொகுப்பாளர் அதிரடி கைது 
 
 

தொலைக்காட்சிகளில் சினிமா பிரபலங்களை வைத்து டாக் ஷோ நடத்தி மக்களை பொழுபோக்காக  கொண்டுச்சென்ற காலங்கள் போய் இப்போது எண்ணற்ற பல யூடியூப் சேனல்கள் உருவாகி அவர்கள் பொதுவெளியில் மக்களோடு மக்களாக சென்று உறவாடி இஷ்டத்துக்கும் கேள்விகளை கேட்டு வருகின்றனர். 

அந்தவகையில்  "chennai talks” என்ற பிராங்க் ஷோக்களுக்கு பெயர் போன யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பளராக பணியாற்றும் அசன் பாதுஷா பெண்களிடம் கன்னித்தன்மை குறித்து கேள்விகேட்டு தனிமனித சுதந்திரத்தில் எல்லை மீறியுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் உள்ளிட்ட மொத்தம் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் பேசப்பட்டு வருகிறது.

இதே போன்று பெயர் குறிப்பிட விரும்பாத பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் VJ பார்வதி என்ற இளம் பெண்ணும் ஆண் , பெண் என பாகுபாடின்றி எல்லோரிடமும் சரமாரியாக ஆபாசமான கேள்விகளை பொதுவெளியில் கேட்டு வருவதாகவும் எனவே அவரையும் கைது செய்யங்கள் என நெட்டிசன்ஸ் கிண்டலாக மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News