×

2 வருடங்களாக ஆபாச திரைப்படம் - சென்னை வாலிபர் கைது
 

குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு பகிர்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும். எனவே, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
 

எனவே, கடந்த சில மாதங்களாகவே குழந்தைகள் ஆபாச திரைப்படங்களை பார்த்து வருபவர்களின் தகவல்களை போலீசார் சேகரித்து வந்தனர். இதில், ஏற்கனவே திருச்சியை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் ஹரிஸ் என்கிற வாலிபர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளர். அவரின் செல்போனில் குழந்தைகள் ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News