×

இந்த செய்தி உலுக்குகிறது... எப்படி தாங்குவாய் மகளே! - லாஸ்லியாவுக்கு சேரன் இரங்கல்...

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவருக்கென ரசிகர் கூட்டமும் உண்டானது. கவினுக்கும், இவருக்குமான காதல் கதை ஒரு தனிக்கதை. 

தற்போது, அதிர்ச்சி செய்தியாக அவரின் தந்தை மரியநேசன் இன்று திடீர் மரணமடைந்துள்ளார். லாஸ்லியாவின் தந்தை அவரின் குடும்பத்தினரை பிரிந்து கனடா சென்றுவிட்டதாகவும், அவரை பார்த்து 10 வருடங்கள் ஆகிவிட்டதாகவும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது லாஸ்லியா கதறி அழுதார்.

losliya

மேலும், பிக்பாஸ் வீட்டில் தந்தையின் பாசத்திற்கு ஏங்கிய அவர், இயக்குனர் சேரன் தனது தந்தை சாயலில் இருப்பதாக கூறி அவரை சேரப்பா என்றே அழைத்தும் வந்தார்.

தற்போது லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்த செய்திகேட்டு சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

லாஸ்லியாவுன் சமூக வலைத்தளங்களில் #Losliya என்கிற ஹேஷ்டேக் மூலமாக இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News