என் பலமே என்னை பிரிந்து சென்றது.... தாயை இழந்த வேதனையில் சேரன்!
இயக்குனர் சேரன்:
தமிழ் திரைப்படத் துறையில் பிரபலமான திரைப்பட இயக்குனராக பார்க்கப்பட்டு வருபவர் தான் சேரன். இவர் வெற்றிக்கொடிக்கட்டு, ஆட்டோகிராப்,, தவமாய் தவமிருந்து போன்ற பல்வேறு திரைப்படங்களை சிறப்பாக இயக்கி வெற்றி பெற்றதற்காக தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்டவை பெற்றிருக்கிறார் .
மேலும் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து,, முரண் போன்ற படங்களிலும் கதாநாயகனாகவும் இவர் நடித்திருக்கிறார். இதனிடையே விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .
தாயார் மரணம்:

அப்போது மீரா மிதுன் சேரன் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்ததால் அவமானப்பட்டார். இதனால் பல இயக்குனர்கள் அவருக்கு துணையாக நின்று ஆதரவாக பேசினார்கள். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், இயக்குனர் நடிகர், சேரன் அவர்களின் தாயார் வயது முதிர்வால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமாகி இருக்கிறார்.
அவரது இறுதி சடங்கு சொந்த ஊரான மதுரை மேலூர் அருகே உள்ள பாளையூர்பட்டியில் நடைபெற இருக்கிறது. சேரனின் தாயார் மறைவிற்கு அவரது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
ஆறுதல்:
ஆரம்ப காலத்தில் சேரனின் தோல்வியிலும் , வளர்ச்சியிலும், அவரது வெற்றியிலும் பெரும் பங்காக இருந்து வந்த அவரது தாய் இறப்பிலிருந்து சேரன் மீளா துயரத்தில் இருக்கிறார். அம்மையாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் இயக்குனர் சேரனுக்கு ஆறுதலையும் தெரிவித்து கொள்வோம்.
