×

அட கொஞ்சம் தாமதம் ஆச்சு.. அதுக்குனு இப்படியா சேரப்பாவ கலாய்ப்பீங்க.. 

சேரனின் ஒரு ட்வீட்டால் மீண்டும் ட்ரெண்டிங்காக பேசப்பட்டு வருகிறார்.
 
அட கொஞ்சம் தாமதம் ஆச்சு.. அதுக்குனு இப்படியா சேரப்பாவ கலாய்ப்பீங்க..

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருந்தவர் சேரன். அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றியை பெற்றன. தொடர்ந்து, நடிக்கவும் செய்தார். கடந்த பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். சக போட்டியாளரான லாஸ்லியா தனது தந்தை போல இருப்பதாக கூறியதால் சேரனுடன் லாஸ்லியாவும் வைரலானார். அவர் கூப்பிடுவது போல ரசிகர்களும் சேரப்பா என அழைத்து வந்தனர். தொடர்ந்து, சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில், சேரன் நெட்டிசன்களிடம் சிக்கி இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சேரன் தனது பிறந்தநாளுக்கு விடுப்பட்ட பதிவுகளுக்கு நன்றி கூறி வந்தார். அந்த வகையில் சன்டிவி ட்விட்டர் கணக்கில் இருந்து 7 வருடத்துக்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கு தற்போது நன்றி தெரிவித்து சற்று தாமதமாகி விட்டதாக பதில் அளித்தார். நன்றி சொல்லுறதெல்லாம் சரி தான் சேரப்பா அதுக்குனு 7 வருஷம் கழிச்சா என தொடர்ந்து ட்ரோல் செய்ய துவங்க, உடனே அந்த பதிவை நீக்கினார் சேரன். நம்ம நெட் மக்களுக்கு சும்மா ஸ்கீரின் சாட்களை தற்போது வைரலாக பரப்பி வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News