Connect with us

Bigg Boss

பாலய்யா பண்ண பலான வேலை.. பற்ற வைத்த விசித்ரா.. கமல் இப்போ வாய்ஸ் கொடுப்பாரா?

பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக நடித்துள்ள நடிகை விசித்ரா ஆரம்பத்தில் தலைவாசல் படத்தில் தான் அறிமுகமானார். மடிப்பு அம்சா எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார்.

மன்சூர் அலி கான் திரிஷா விவகாரம் ஒரு பக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலய்யா நடித்த பாலவடிவு பாசு எனும் படத்தில் நடந்த போது அவருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை அனுபவத்தை சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் விசித்ரா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பாக்யராஜால், பார்த்திபனை வச்சு செஞ்ச இளையராஜா… என்ன நடந்துச்சு தெரியுமா?

சினிமாவில் நடிகைகள் காலம் காலமாக அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லைகளை பல நடிகர்கள் படங்களில் நடிக்கவும் அனுபவித்து வருவதாக செய்திகள் மற்றும் கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், ஆரம்ப காலக்கட்டத்தில் பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் வெளியே சொல்வதில்லை என்றும் சில நடிகைகள் சினிமாவை விட்டு காணாமல் போக காரணமே நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் அட்டூழியத்தால் தான் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் விசித்ரா சொன்ன அந்த நபர் தெலுங்கு நடிகர் பாலய்யா தான் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதை கண்டுபிடித்து வெளுத்து வாங்கி வருகின்றனர் எனக் கூறிய செய்யாறு பாலு, அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலய்யாவுடன் நடிக்கப் போகிறோம் என சந்தோஷத்தில் முதல் நாள் வணக்கம் வைத்துள்ளார். அதையெல்லாம் கண்டுக் கொள்ளாத பாலய்யா முதல் நாளே தனது அறைக்கு அவரை அழைத்துள்ளாராம்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு மட்டும் தரீங்க… எனக்கும் வேணும்.. எம்.ஜி.ஆரிடம் அடம் பிடித்து வாங்கிய நம்பியார்..!

அதற்கு முடியாது என மறுத்த நிலையில், அவரது ஆட்களை வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதிலிருந்து தப்பிக்க உதவிய புரடொக்‌ஷன் மேனேஜரையே திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு அவர் முழுக்குப் போட்டதாகவும் இதையெல்லாம் கமல் இந்த வாரம் கேட்டு விசித்ராவுக்கு ஆதரவு குரல் கொடுப்பாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top