Balan - The Boy Box Office : 2 நாட்களில் 'பாலன் - தி பாய்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
balan the boy collection

Balan Movie Box Office : 2 நாட்களில் 'பாலன் - தி பாய்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சிதம்பரம்.

இவர் இயக்கிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் உலகமெங்கும் மிகப் பெரிய பாராட்டை குவித்தது. சிதம்பரம் இயக்கியிருக்கும் மூன்றாவது படமான 'பாலன் - தி பாய்' மலையாளம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நேற்று முன் தினம் (ஜூன் 19-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான இதில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் ஆதிசேஷன், ஃபர்சானா பாலதிங்கல், ஜீன் பால் லால், கிரிஷ், முகமது ஜினான், பீனா ஆண்டனி நடித்துள்ளார்கள். மேலும், 'அப்பாஸ்' என்ற கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் நடித்திருக்கிறார்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.4.83 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web