Balan - The Boy Box Office : 3 நாட்களில் 'பாலன் - தி பாய்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Balan Movie Box Office : 3 நாட்களில் 'பாலன் - தி பாய்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' மலையாள படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'பாலன் - தி பாய்'.
இப்படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கில் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இதில் நடித்துள்ள ஆதிசேஷன், ஃபர்சானா பாலதிங்கல் இருவரின் நடிப்புக்கும் சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
'KVN புரொடக்ஷன்ஸ் - Thespian பிலிம்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு கதை, திரைக்கதையை ஜித்து மாதவன் எழுதியுள்ளார், சுஷின் ஷ்யாம் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் எதிர்பார்த்தது போலவே நன்றாக இருக்கிறது என விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். தற்போது, இந்த படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.8.31 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
