Balan - The Boy Box Office : 4 நாட்களில் 'பாலன் - தி பாய்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Balan Movie Box Office : 4 நாட்களில் 'பாலன் - தி பாய்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. மலையாள மொழியில் உருவாகியுள்ள புதிய படமான 'பாலன் - தி பாய்' தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த ஜூன் 19-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
இதில் ஆதிசேஷன், ஃபர்சானா பாலதிங்கல், ஜீன் பால் லால், கிரிஷ், முகமது ஜினான், பீனா ஆண்டனி ஆகியோர் கதையின் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், கெஸ்ட் ரோலில் டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.
இந்த படத்தின் கதை - திரைக்கதையை 'ஆவேசம்' புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார், படத்தை 'மஞ்சும்மல் பாய்ஸ்' புகழ் இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இதனை 'KVN புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் சேர்ந்து 'Thespian பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு டார்கெட் ஆடியன்ஸிடம் வரவேற்பு கிடைத்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.17.53 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
