Balan - The Boy Box Office : 6 நாட்களில் 'பாலன் - தி பாய்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Balan Movie Box Office : 6 நாட்களில் 'பாலன் - தி பாய்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' (மலையாளம்) படத்தின் மிகப் பெரிய வெற்றி, இயக்குநர் சிதம்பரத்திற்கு உலகமெங்கும் அதிக ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது.
ஆகையால், இவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை இவர் இயக்கிய புதிய படமான 'பாலன் - தி பாய்'-ன் ட்ரெய்லர் வெளியாகி இன்னுமே அதிகப்படுத்தியது.
இப்போது படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகியிருக்கும் இதில் ஆதிசேஷன், ஃபர்சானா பாலதிங்கல், டொவினோ தாமஸ் நடித்துள்ளனர்.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருக்கிறார். தற்போது, இந்த படம் கடந்த 6 நாட்களில் உலக அளவில் ரூ.20.42 கோடி வசூல் செய்துள்ளதாம்.
