Balan - The Boy Box Office : ஒரு வாரத்தில் 'பாலன் - தி பாய்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Balan the boy 7 days collection

Balan Movie Box Office : 7 நாட்களில் 'பாலன் - தி பாய்' படம் செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' புகழ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் ஃபர்சானா பாலதிங்கல், ஆதிசேஷன் நடித்திருக்கும் படம் தான் 'பாலன் - தி பாய்'.

கடந்த ஜூன் 19-ஆம் தேதி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி, நல்ல படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நேற்று முன் தினம் இந்த படத்தை கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவும், அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா பார்த்து ரசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று சூர்யா எக்ஸ் தளத்தில் இயக்குநர் சிதம்பரத்தையும், இப்படக்குழுவினரையும் பாராட்டி பதிவிட்டிருந்தார்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான இதன் கதை, திரைக்கதையை சூர்யாவின் 47-வது படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 'பாலன் - தி பாய்' திரைப்படம் கடந்த ஒரு வாரத்தில் உலக அளவில் ரூ.21.91 கோடி வசூல் செய்துள்ளதாக தண்டோரா போடப்படுகிறது.

From Around the web