Balan - The Boy Box Office : 'பாலன் - தி பாய்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?
Balan Movie Box Office : 'பாலன் - தி பாய்' படத்தின் முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' மலையாள படம் மூலம் அதிக கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிதம்பரம்.
இதன் வெற்றிக்கு பிறகு சிதம்பரம் பல முன்னணி கோலிவுட் ஹீரோக்களுடன் கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் வந்த வண்ணமிருந்தது. ஆனால், அவரோ 'மஞ்சும்மல் பாய்ஸ்' பாணியில் புதுமுகங்களை வைத்து 'பாலன் - தி பாய்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் நேற்று (ஜூன் 19-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 'ஆவேசம்' புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் கதை, திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தில் ஆதிசேஷன், ஃபர்சானா பாலதிங்கல், டொவினோ தாமஸ், முகமது ஜினான், ஜீன் பால் லால், கிரிஷ், பீனா ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.2.10 கோடி என்று தகவல் கிடைத்துள்ளது.
