'மஞ்சும்மல் பாய்ஸ்' சிதம்பரம் இயக்கிய 'பாலன் - தி பாய்'... OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 
Balan the boy

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கிய படம் தான் 'மஞ்சும்மல் பாய்ஸ்'.

இப்படம் உலகமெங்கும் அனைத்து ரசிகர்களுக்கும் எமோஷனலாக கனெக்ட்டாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து இவருக்கு பல கோலிவுட் நடிகர்களுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு வந்தது.

ஆனால், தனக்கு கதை தான் முக்கியம் என்று கூறி 'பாலன் - தி பாய்' படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கினார். இப்படம் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளி வந்தது. 

Balan the boy z5

இதில் கதையின் முக்கிய வேடங்களில் ஆதிசேஷன், ஃபர்சானா பாலதிங்கல் நடித்திருந்தனர். மேலும், டொவினோ தாமஸ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது, இந்த படத்தை வருகிற ஜூலை 31-ஆம் தேதி பிரபல OTT தளமான Z5-யில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web