×

மக்களின் நெஞ்சில் பசுமரத்தாணி போல ஆணித்தனமாக இடம் பிடித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!!

அதிமுக சார்பாக 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையே அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

 

அதிமுக சார்பாக 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையே அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மக்களின் நெஞ்சில் பசுமரத்தாணி போல ஆணித்தனமாக இடம் பிடித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து அதிமுகவை நிலையான கட்சியாக வலுப்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடியார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா காலத்திலும் முதல்வரின் நடவடிக்கைகள் மற்றும் புதிய திட்டங்களால் தமிழகத்தில் கொரோனாவால் குணமடைவோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது.

அதேபோல கொரோனா காலத்திலும் ஏற்படுத்தப்பட்ட தளர்வுகளால், பொருளாதார ரீதியாகவும் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாக முன்னேற்றம் அடைந்து வருகிறதுஇதனால் மக்களின் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இதுவரை இல்லாத அளவு அதிக வரவேற்பும் நம்பிக்கையும் கிடைத்துள்ளது. மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக தொண்டர்கள் என அனைவரையும் எடப்பாடியாரின் நிர்வாகத் திறமையை எண்ணி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளராக .பி.எஸ்- அறிவிக்க வேண்டும் என்பதே கழக உறுப்பினர்களின் ஒருமித்த குரலாக இருந்துள்ளது. அதே நேரத்தில் கட்சியில் அனைவரையும் அணைத்து போகும் குணமும் .பி.எஸ்ஸிடம் இருப்பதாகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும் மக்கள் கட்சி தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் என யார் எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும் உடனடியாக அதற்கு தீர்வு கொடுக்கும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இடம் பிடித்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மீண்டும் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடுவார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News