3வது மனைவியும் வேண்டாம்!.. திடீர் முடிவை அறிவித்த துணை முதல்வர்.. என்ன ஆச்சு பாஸ்?..
டோலிவுட்டின் பிரபல நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவியான அன்னா லெஷ்னேவாவை பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பவன் கல்யாண், கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா லெஷ்னேவாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 13 ஆண்டுகளிக்கு பிறகு தற்போது அவர்கள் பிரியப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவருடைய சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கு முடிவு எடுத்திருந்தாலும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே பவன் கல்யாண் கடந்த 1997ஆம் ஆண்டு நந்தினி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு பின்னர் அவரைப் பிரிந்தார். அதன்பிறகு நடிகை ரேணு தேசாயை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து, அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார். இந்த நிலையில், மூன்றாவது திருமணமும் பிரிவை நோக்கிச் செல்வதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
