×

முதல்வர்னா இப்படி இருக்கணும்… பினராயி விஜயன் அறிவித்த திட்டங்கள் – குவியும் பாராட்டுகள் !

கொரோனா வைரஸைப் பாதிப்பைத் தடுக்க மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லி அறிவுறுத்தப்படும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் போக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது கேரள அரசு.

 

கொரோனா வைரஸைப் பாதிப்பைத் தடுக்க மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்லி அறிவுறுத்தப்படும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் போக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது கேரள அரசு.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மக்களை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றன அரசுகள். இந்திய பிரதமர் மோடி கூட சுய ஊரடங்கினை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமே பிரச்சனையாகியுள்ளது.

அதை சமாளிக்கும் விதமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்பட நிதி ஒதுக்கியும் சில நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

  • கொரோனா வைரஸ் 20,000 கோடி ரூபாய்க்கான திட்டத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
  • மாநிலம் முழுவதும் ஆயிரம் ஹோட்டல்கள் திறக்கப்பட்டு, அதில் அனைவருக்கும் 20 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
  • 500 கோடி ரூபாய்க்கு மெடிக்கல் பேக்கேஜ்
  • எல்லா குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கான இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும்.
  • வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதி உதசி வழங்கப்படும்.
  • முதியோர் பென்சன் பெறுபவர்களுக்கு இரண்டு மாத பென்சன் சேர்த்து வழங்கப்படும். அதற்காக, 1,320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நூறு நாள் வேலை உறுதித்திட்ட தொழிலாளர்களுக்கென 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News