×

யுட்யூப் வீடியோக்களைப் பார்த்து பிரசவம்… பலியான குழந்தை… காதலியின் நிலைமை!

கும்மிடிப்பூண்டி அருகே தனது காதலிக்கு யுட்யூப் வீடியோக்கள் மூலம் பிரசவம் பார்த்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கும்மிடிப்பூண்டி அருகே தனது காதலிக்கு யுட்யூப் வீடியோக்கள் மூலம் பிரசவம் பார்த்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் சௌந்தர் மூலம் கர்ப்பமாகியுள்ளார். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பமானது குறித்து இரு குடும்பத்தாருக்கும் கோபம் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் 8 மாத கர்ப்பமாக இருக்கும் அந்த பெண்ணுக்குக் திடீரென வலி ஏற்பட சௌந்தருக்குத் தகவல் சொல்லியுள்ளார்.  உடனே அந்த பெண்ணைக் யாரும் இல்லாத காட்டுக்கு அழைத்து சென்ற சௌந்தர், யுட்யூப்பில் பிரசவ வீடியோக்களைப் பார்த்து அதில் செய்வது போலவே காதலிக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்துள்ளார். அப்போது குழந்தையின் கை வெளியே வர அதைப் பிடித்து சௌந்தர் இழுக்க கைமட்டும் துண்டித்துக் கொண்டு வெளியே வந்துள்ளது. உடல் வரவில்லை. இதனால் பயந்த சௌந்தர் 108 க்கு அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கே அந்த பெண்ணின் நிலைமையை அறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது. அதையடுத்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட மாணவியைக் காப்பாற்றும் பொருட்டு தீவிர சிகிச்சையும் அளித்து வருகின்றனர். இதையடுத்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் சௌந்தரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News