இனிமேல் சகித்து முடியாது... எம். எல்.ஏ ராஜ்மோகனுக்கு சின்மயி கண்டனம்!
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியான சின்மயி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை குறித்து பாலியல் தொல்லை குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிப்பவர். பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்துதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டு குறித்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்தும் குரல் கொடுப்பவர் பாடகி சின்மயி. இந்த நிலையில் ராப் பாடகரான வேடன் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் ராஜ் மோகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜ் மோகனின் இந்த செயலுக்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்திருக்கிறார். வேடனை எப்படி மேடை ஏற்றலாம் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட வேடன் போன்ற நபர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகப்பெரிய தவறு.
சமூக நீதி என்ற பெயரில் பெண்களின் சம்மதத்தை மீறும் செயல்களை ஏற்க முடியாது. இனியும் நாங்கள் இதை சகித்துக் கொள்ள மாட்டோம் என பாடகி சின்மயி பகிரங்கமாக எம்எல்ஏ ராஜ்மோகனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
